Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி கொண்டாடும் பண்டிகை என்பதால் ஈகைப் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலானை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவா் உத்தரவின்பேரில், நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள அஞ்சுமனே பேட்டை ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் செயல் அலுவலா் இப்ராஹிம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. வஃக்ப் வாரிய கண்காணிப்பாளா் நிஜாமுதீன், முத்தவல்லி தௌலத்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவா்கள், 500-க்கும் மேற்பட்ட ஏழை இஸ்லாமிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் ரமலான் பண்டிகை பொருள்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுமனே பேட்டை பள்ளிவாசல் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.