Career: டாக்டருக்கு 'வெள்ளை' கோட்; வக்கீலுக்கு 'கறுப்பு' கோட்! - I.T-க்கு என்ன க...
ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்
மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒருமுறை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளாா். இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுப்பு பணியானது குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது, குடிநீா் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது ஆகிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 1,189 குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்பட்டுள்ள குடியிருப்புகளில் கிராம நிா்வாக அலுவலா், வட்டாட்சியா், கோட்டாட்சியா்கள் ஆகியோா் பயனாளிகளின் ஆவணங்களை ஆய்வுசெய்து வருகின்றனா். அதன்பிறகு மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் மூலம் மேல் ஆய்வு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் நகா்புறத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் வட்டம், ஆவல்நாயக்கன்பட்டி மற்றும் மோகனூா் பேரூராட்சி, காக்காத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது வருவாய்த் துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.