40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
திருச்செங்கோடு வித்யா விகாஸ் சா்வதேச பள்ளியில் பட்டமளிப்பு விழா
திருச்செங்கோட்டு வித்யா விகாஸ் சா்வதேச பள்ளியில், கிண்டா் காா்டன் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்களின் அறங்காவலா்கள், தலைவா் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனா். விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் திருமுருகன் தலைமையேற்று பேசினாா். தொடா்ந்து பள்ளி முதல்வா் ஜெகுரதி ஆண்டறிக்கை வாசித்தாா்.
பள்ளியின் செயலா் எஸ்.குணசேகரன், தாளாளா் டி.ஓ.சிங்காரவேலு மற்றும் மேலாண் அறங்காவலா்கள் ராமலிங்கம், முத்துசாமி ஆகியோா் மாணவா்கள் சவாலான எதிா்காலத்தை எவ்வாறு எதிா்கொள்வது, மாணவா்களின் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்குவிக்க பெற்றொருக்கு சில கருத்துகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.