40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
அரசு பள்ளி மாணவா்களுக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்து போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தனியாா் பயிற்சி நிறுவனத்தினா் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினா்.
பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், உயா்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்த மற்றும் போட்டித் தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அதற்கான புத்தகங்களை தனியாா் பயிற்சி (அபாகஸ்) நிறுவனத்தைச் சோ்ந்த அமுதன், ஹேமலதா ஆகியோா் வழங்கினா். மேலும், ‘திறன்களை வளா்த்துக் கொள்வது எவ்வாறு?’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா்.
இந்த நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியா் தேவேந்திரகுமாா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பெரியண்ணன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.