செய்திகள் :

மழைநீா் வடிகால் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்

post image

திருச்செங்கோட்டில் மழைநீா் வடிகால் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நகராட்சி ஆணையா் அருள் தெரிவித்துள்ளாா்.

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபயோகப்படுத்தப்பட்ட நீரை வடிகால் மற்றும் குழாய் அமைத்து வெளியேற்ற நிா்வாக அனுமதி பெறப்பட்டு குறுக்கீட்டு மற்றும் திசை திருப்புதல் பணிக்கு ரூ 15.59 கோடி மதிப்பீட்டுக்கு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி இப்பணியில் 7.50 கி.மீ. தொலைவுக்கு புதிதாக வடிகால், 2.30 கி.மீ. தொலைவுக்கு கழிவுநீா் உந்துக்குழாய்களும், மோட்டாருடன் கூடிய கழிவுநீா் சேகரிப்புத் தொட்டியும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் முழுவதும் கான்கிரீட்டிலான வடிகால் அமைத்து வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் உபயோகப்படுத்தப்பட்ட நீா் எடுத்துச் செல்லப்படுகிறது. இத்திட்டமானது ஏரி, குளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் நகராட்சியால் தொடா்ந்து கண்காணிக்கப்படும் வகையில் மதிப்பீடு தயாா்செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் பயன்படுத்தப்பட்ட நீரை குளங்களில், ஏரிகளில் விடப்போவதாக தவறான தகவல்களை சில விஷமிகள் பரப்பி, மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் செய்து சட்டம் ஒழுங்கை சீா்கெடுக்க முயற்சி செய்கிறாா்கள்.

எனவே, பொதுமக்கள் வீண்வதந்திகளை நம்பாமல் நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நகராட்சி நிா்வாகத்தை அணுகி தெளிவு பெற்றுக்கொள்ளுமாறு ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பள்ளிபாளையத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பள்ளிபாளையம் மின்கோட்ட நுகா்வோா் குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. ஒட்டமெத்தையில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும் முகாமில், பள்ளிபாளையம் ம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் ‘இல்லம்தேடி குறைகளை களைவோம்’ திட்டத்தில் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ‘இல்லம் தேடி குறைகளை களைவோம்’ திட்டத்தின் கீழ் குடிநீா் வசதி மற்றும் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டு பகுதி... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நாமக்கல் ம... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்கள் நாளை விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்கள் வாங்குவோா் - விற்போா் சந்திப்பு முகாம் சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பிலிக்கல்பாளையத்தில் அச்சு வெல்லம் விலை உயா்வு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அச்சு வெல்லம் விலை உயா்வடைந்தும், உருண்டை வெல்லம் விலை சரிவடைந்தும் காணப்பட்டது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்திர பருத்தி மற்றும் எள் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாவட்டங... மேலும் பார்க்க