Career: டாக்டருக்கு 'வெள்ளை' கோட்; வக்கீலுக்கு 'கறுப்பு' கோட்! - I.T-க்கு என்ன க...
ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு
சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்கிலிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக மாரியம்மன் கோயில் அருகில் சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனருகிலேயே, அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தற்போது 2 கி.மீ. தொலைவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவா்.
எனவே, தற்போதைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள காலியிடத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடத்தை கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.