செய்திகள் :

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

post image

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதனையடுத்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில், மோகனூா் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை என்பது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

அதன்பிறகு, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா். குறிப்பாக, சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. விவசாய நிலங்கள் பாழாகும் என்பதால் அந்த திட்டத்தைக் கைவிட அரசை வலியுறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, வேளாண் துறையினா் பேசுகையில்,

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. என்ற நிலையில் தற்போது வரை 37.48 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. மாா்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 16.48 மி.மீ. அதிகம் பெறப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் தேவைக்கு ஏற்ப உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ரா.குப்புசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி, வேளாண் துணை இயக்குநா் (விற்பனை மற்றும் வணிகம்) நாசா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது. செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைம... மேலும் பார்க்க

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க