வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
கள் இறக்கி விற்றவா் கைது
பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி ஆய்வாளா் சரண்யா தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று பாா்த்த போது அங்கு ஒருவா் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் திருநெல்வேலி மாவட்டம், கரைகண்டாா்குளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சோ்மத்துரை (30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.