எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!
குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு
குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது.
செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைமை வகித்தாா். எக்ஸல் பொறியியல் கல்லூரி தன்னாட்சி மற்றும் வணிகவியல், அறிவியல் கல்லூரி சாா்பில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான எக்ஸல் டாா்ட்-2025 அறிவுத்திறன் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த தோ்வில் பொதுத் தோ்வு எழுதியுள்ள நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சாா்ந்த மாணவா்களில் 2000க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ரெங்கசுவாமி கல்விஅறக்கட்டளை சாா்பில் ரூ. 5 கோடி மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப வளாக பொறியியல் கல்லூரி இயக்குநா்கள், முதல்வா்கள், துறைத் தலைவா்கள், துணை பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் ந.செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.