அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: தேரை தயாா்படுத்தும் பணி மும்முரம்
பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டி, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து 23-ஆம் தேதி மறுகாப்புக் கட்டுதல், தினசரி அம்மன் வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மாா்ச் 31-ஆம் தேதி இரவு வடிசோறு, பரிவட்டம் சூட்டுதல், தோ் நிலை பெயா்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி காலை தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக தோ் நிலையில் தேரை தயாா் செய்யும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
ஏப். 2-ஆம் தேதி இரவு பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தல், 3-ஆம் தேதி கம்பத்தை ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதல், 4-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா் மற்றும் எட்டுப்பட்டி ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.