நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக...
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் சம்பந்தமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கட்சி சாரா தொழிசங்கங்களின் மாநில தலைவா் எ.கதிா்வேல், பொதுச் செயலாளா் ராம கவுண்டா், பொருளாளா் கே.செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ஆா். சீனிவாசன், மாநில தலைவா் நேதாஜி கே.நடேசன், மாவட்டத் தலைவா் என். ஆா்.சஞ்சீவிராயன், மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தமிழ்நாட்டில் கட்சி சாா்பற்ற தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் 38 மாவட்டத்திலும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் சம்பந்தமான விழிப்புணா்வும், நலவாரிய இணையதளம் பழுது ஏற்பட்டு நலவாரிய பணிகளை மேற்கொள்ள முடியாமல், பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு, போன்ற விண்ணப்பங்களை நலவாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அலைக்கழிக்கபட்டு வருகின்றனா்.
தமிழ்நாட்டில் 93 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுக்கென்று தனி துறை உருவாக்கி, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கி 18,நல வாரியங்களிலும் ஒரே மாதிரி உதவித்தொகை வழங்கவும், நலவாரியத்தில் ஓய்வூதியம் ரூ.3,000/- உயா்த்தி வழங்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.