செய்திகள் :

பெரு நாட்டில் 2026-ல் பொதுத் தேர்தல்! அதிபர் அறிவிப்பு!

post image

தென் அமெரிக்க நாடான பெருவின் பொதுத் தேர்தல் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரு நாட்டில் கடந்த 1990-க்கள் முதல் இரு அவை தேர்தல் முறையானது நடைமுறையில் இல்லாத நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அந்நாட்டின் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என அதிபர் தீனா பொலுவார்த்தே அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்தலின் மூலம் புதிய அதிபர், 130 பிரதிநிதிகள் மற்றும் 60 சென்னேட்டர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருகின்ற தேர்தலானது ஜனநாயக முறைப்படி தெளிவாக எந்தவொரு ஒழிவு மறைவுமின்றி நடத்தப்படும் என தேசிய அளவிலான தொலைக்காட்சி அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ தனது ஆட்சியின் 2-வது ஆண்டில் பதவி நீக்கப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்காக தீனா பொலுவார்த்தே அதிபராக பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில், 2025 மார்ச் மாதம் அந்நாட்டு மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி 93 சதவிகித மக்கள் அதிபர் பொலுவார்த்தேவின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால், அவர் மக்களிடையே செல்வாக்கற்ற அதிபராக அறியப்படுகிறார்.

கடந்த வாரம் பெரு, ஈக்வடார், பொலிவியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அண்டீயன் நாட்டு பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகளை முறையாகக் கையாளத் தவறியதாக் குற்றம்சாட்டப்பட்டு பெருவின் உள்துறை அமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அண்மையில், அந்நாட்டைச் சேர்ந்த அர்மோனியா 10 என்ற இசைக்குழுவை தலைநகர் லிமாவில் தாக்கிய மர்ம நபர்கள் அந்த குழுவின் முன்னணி பாடகரான பால் ஃப்லோரஸ் (வயது 39) என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதன் பின்னர், அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்த்து பெரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் பொலுவார்த்தே கடந்த மார்ச் 19 அன்று லிமாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தி தலைநகர் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் பெருவில் 2,057 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதிபர் பொலுவார்த்தேவின் அரசு கடந்த 2024 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை அந்நாட்டில் அவசர நிலையைப் பிரகடப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க