"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!
சேலம் எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு ஏந்தி ஊர்வலம் வந்தனர்.
சேலம் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோியிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
முன்னதாக சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து எல்லப்பிடாரியம்மன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. திருக்கோவிலை வந்து அடைந்தவுடன் பூசாரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜை செய்தார். மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்
தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்தி அழைக்கும் நிகழ்ச்சியைக் காண அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை காலை பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும், அலகு குத்துதல் தொடர்ந்து சக்தி பூ கரகத்துடன் அம்மன் ஊர்வலம் 27ல் திருக்கல்யாணம் மற்றும் அக்னி குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சியும் 28-ந் தேதி பால்குட ஊர்வலம் மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சனிக்கிழமை இரவு சதாபரண நிகழ்ச்சியுடன் அம்மன் திருவிழா நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.