"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
ஆவுடையார் கோயிலில் புதிய தீயணப்பு நிலையம் அமைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்தின் பேசும்போது, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
கருப்பசாமி பாண்டியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு மாவட்டங்களில் 72 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றன. 23 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களும் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு, மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்காக ரூ.2.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் மே மாதம் தொடங்கும். அடுத்தாண்டு பிப்ரவரியில் திறக்கப்படும்.
மேலும், உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் அமைக்கப்படும்.
காவல்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்போது சில அறிவிப்புகள் வரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.