"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்ற முறையீடு!
திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதன்கிழமை முறையிட்டுள்ளனர்.
திருநெல்வேலி நகரம் தொட்டி பாலத்தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி (60). காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப் பிரிவில் பணியாற்றியவா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சாமியா தைக்கா பள்ளி வாசலில் ரமலான் நோன்பு தொழுகையை முடித்த பின் வீட்டிற்கு நடந்து சென்ற அவரை, இருசக்கரவாகனத்தில் வந்த மா்மநபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினா்.
இந்த வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், முகமது தெளஃபிக் என்பவரைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
இந்த நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஜாகீா் உசேனின் மகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.