நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக...
மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேரில் கலந்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம், இத்தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.