செய்திகள் :

வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!

post image

வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

61 வயதான பில் சிம்மன்ஸ் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர் சாம்பியன்ஸ் டிராபி வரை தொடர்ந்தார்.

பில் சிம்மன்ஸ் முதல்முறையாக 2004 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக பயிற்சியாளராகத் தொடங்கினார். அதன்பின்னர், 2007 முதல் 2015 வரை அயர்லாந்து பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

அதன்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் தலைமையில் அந்த அணி, 2016 ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையையும் வென்றது. அதன்பிறகு வங்கதேசத்துடன் இணைவதற்கு முன்னதாக 2018 - 2019 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானையும் வழிநடத்தினார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்னதாக, பில் சிம்மன்ஸின் தலைமையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி விளையாடவிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பா... மேலும் பார்க்க

இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்க... மேலும் பார்க்க

பாக். ஒருநாள் தொடர்: நியூசி. கேப்டன் லதாம் விலகல்! புதிய கேப்டன் யார்?

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகலா?

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடர... மேலும் பார்க்க

கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதில் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள... மேலும் பார்க்க