செய்திகள் :

தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!

post image

தென்கொரியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பரிதாபமாக பலியான நிலையில், 19 பேர் காயமடைந்தனர்.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள பொதுமக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், உய்சிங் கவுன்டியின் மலைப் பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும், அதிலிருந்த விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ஒரே நாளில் 15 முறை நிலநடுக்கம்! என்ன காரணம்?

மியான்மரில்(பர்மா) ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள மிக சக்திவாய்ந்த நிலடுக்கம் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை ப... மேலும் பார்க்க

டைம் டிராவல் செய்ய ஆசையா? கூகுளின் புதிய அம்சம்!

கூகுள் மேப்பில் டைம் டிராவல் செய்யும்வகையில் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் எவ்வாறு இருந்தது என்று தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், ... மேலும் பார்க்க

இனி ஸ்டேட்டஸ்களில் பாடல் சேர்க்கலாம்! உற்சாகத்தில் வாட்ஸ் ஆப் பயனர்கள்!

வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்த்து பதிவேற்றும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் ஆப்பின் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய அம்சத்... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பலி 694 ஆக உயர்வு! 1,670 பேர் காயம்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் நேற்று(மார்ச் 28) காலை 11.50 மணியளவில்... மேலும் பார்க்க

மியான்மா், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம் 170 போ் உயிரிழப்பு; 800 போ் காயம்

மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் கடும் பாதிப்பைச் சந்தித்த மியான்மரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 144 போ் உயிரிழந்து... மேலும் பார்க்க

டெக்சாஸ்-மெக்சிகோ: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி!

தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவின் எல்லைப்பகுதியில் கடும் புயல் காரணமாக பெய்த மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக... மேலும் பார்க்க