செய்திகள் :

டெக்சாஸ்-மெக்சிகோ: வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி!

post image

தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

தெற்கு டெக்சாஸ்-மெக்சிகோவின் எல்லைப்பகுதியில் கடும் புயல் காரணமாக பெய்த மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கினர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் 20 முதல் 31 செ.மீ.வரை மழை பெய்ததாகக் கூறினர். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 640 இராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சில பகுதிகளில் 53 செ.மீ.வரை மழை பெய்ததாகவும் கூறுகின்றனர். வெள்ளத்தில் பலரின் வீடுகளும், வாழ்விடங்களும் மூழ்கியதால், நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களைத் தேடி அலைகின்றனர். இந்த நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க:மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் பலி, 800 பேர் காயம்

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் மனித உரிமைகளைக் காப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொண்ட நடவட... மேலும் பார்க்க

அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: தொழுகையில் இருந்த 700 முஸ்லீம்கள் பலி!

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமா... மேலும் பார்க்க

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக... மேலும் பார்க்க

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க