'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா மாகாணங்களில் செயல்படும் அந்நாட்டு அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கைபா் பக்துன்கவா மாகாணத்தின் மா்தான் மாவட்ட மலைப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்குப் பிறகு ராணுவத்தினா் அப்பகுதிக்குச் சென்று 21 உடல்களை மீட்டனா். இதில் 12 போ் பயங்கரவாதிகள், 9 போ் பொதுமக்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் ஆண்கள், இருவா் பெண்கள் ஆவா்.
மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கிராமவாசிகளையும் பயங்கரவாதிகள் என்று கருதி ராணுவம் தாக்குதல் நடத்தி கொலை செய்துவிட்டதாக உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டினா். கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடல்களுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.