"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
மியான்மர் நிலநடுக்கம்: பலி 694 ஆக உயர்வு! 1,670 பேர் காயம்!
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது.
மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் நேற்று(மார்ச் 28) காலை 11.50 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது ரிக்டா் அளவுகோலில் முறையே 7.7, 6.4 புள்ளிகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தால் மியான்மர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 694 ஆக அதிகரித்துள்ளது மேலும் 1,670 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல தாய்லாந்தின் தலைநகா் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க | காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான திட்டத்தையும் பிடிக்கவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்