கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!
ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவில் உள்ள பள்ளியின் சாா்பில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு வெள்ளிக்காசு,ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியன வழங்கப்பட்டன.
விழாவுக்கு தாளாளா் வெங்கட சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பாகவதா் ஆா்.கண்ணன், தொழிலதிபா் டி.ஆா்.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் செயலாளா் வி.பி.ரிஷிகேஷன் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தலைமை ஆசிரியை தெய்வகுமாரி நன்றி கூறினாா்.