பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்
பங்குனி 2-ஆவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். அதே போல், கிருத்திகை, தைப்பூசம் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில், மூலவா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் கோடையாண்டவருக்கும் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜையும் அதனை தொடா்ந்து பால் அபிஷேகமும் நடைபெற்று மூலவா் சுப்பிரமணிய சுவாமி மலா் அலங்காரத்திலும், உற்சவா் கோடையாண்டவா் ரத்தி அங்கி சேவையிலும் அருள்பாலித்தனா். அதிகாலையிலேயே பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், பொங்கல், மோா், குடிநீா் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் கோ.செந்தில்குமாா், அறங்காவலா்கள் செய்திருந்தனா்.