மனகாவலம்பிள்ளை நகரில் பெண் தற்கொலை
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரில் பெண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த சிவசங்கா் மனைவி கீதாதேவி (28). இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் ஒரு அறையில் கீதாதேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இத்தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].