டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!
நெல் மூட்டை விழுந்து காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில், நெல் மூட்டை விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்கோவிலில் உள்ள வேலன் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அன்பழகன் (30). இவா், கடந்த 18ஆம் தேதி வீட்டுக்கு நெல் மூட்டையை தலையில் சுமந்து சென்றபோது, கால் இடறி கீழே விழுந்தாராம்.
இதில், மூட்டை விழுந்ததில் அவரது கழுத்து எலும்பு முறிந்ததாம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.