செய்திகள் :

லஞ்ச வழக்கில் ஜாமீன் பெற்ற லாலு பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருது?

post image

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

பிகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்வுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் அக்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, அக்கட்சி எம்எல்ஏ முகேஷ் குமார் ரௌஷன் கூறியதாவது, ``நாட்டிலேயே லாலு பிரசாத் மிகவும் பிரபலமானவர். அவர்தான், சமூக நீதியின் மூலம் குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்தார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களின் `மேசியா’வாக (விடுதலை மீட்பாளர்) லாலு திகழ்கிறார்.

ஏழைகளின் உரிமைகளுக்காக போராடியதுடன், அவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். அவர், நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னாவுக்கு தகுதியானவர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதையும் படிக்க:மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

இருப்பினும், இது தொடர்பாக மாநில அரசின் பரிசீலனையில் உள்ள எந்த திட்டமும் இல்லை என்று கூறிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி கூறினார். மேலும், தனது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை முகேஷ் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

இதனையடுத்து, மசோதாவை முகேஷ் திரும்பப் பெற மறுத்ததால், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பிலும் இந்த மசோதா வெற்றி பெறவில்லை.

மாட்டுத் தீவின ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது.

ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்

குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகின. ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத... மேலும் பார்க்க

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரர்: வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு!

மசூதியில் தொழுகை நடத்திய ஹிந்து கடைக்காரருக்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரத்தைச் சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் அங்குள்ள மா... மேலும் பார்க்க

உ.பி.: கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

உத்தரப் பிரதேசத்தில், கட்டணம் செலுத்தாததால் ஆண்டுத் தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கமலா ஷரன் யாதவ் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல்... மேலும் பார்க்க

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ... மேலும் பார்க்க

தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்த தில்லி துணைநிலை ஆளுநர்!

கர்நாடகத்திற்குப் பயணம் மேற்கொண்ட தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா, உதகையில் பழங்குடி சமூகத்தினரான தோடர் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.தில்லி துணைநிலை ஆளுநர் வினைகுமார் சக்சேனா உதகையில் உள்ள ... மேலும் பார்க்க