செய்திகள் :

முதல்வர் மு.க.ஸ்டாலினின் உகாதி வாழ்த்து

post image

தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (30-03-2025) கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. உகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இரத்து செய்யப்பட்டாலும் 2006-ஆம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.

தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், நாடாளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும்.

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் காயம்

தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது உகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள்: உறுதி செய்ய அரசு உத்தரவு

சென்னை: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமல்

சென்னை: தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்ட... மேலும் பார்க்க

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள... மேலும் பார்க்க

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்த பணிகளில் சுகாதாரத் துறை

சென்னை: தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. கருப்பை வாய... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க