ஆர்ஜென்டீனாவுடனான தோல்வி எதிரொலி: பிரேசில் பயிற்சியாளர் நீக்கம்!
உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தோல்வியினால் பிரேசில் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் 14 மாத மோசமான செயல்பாடுகளால் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு இந்த முடிவினை எடுத்துள்ளது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா உடன் 4-1 என பிரேசில் மோசமாக தோல்வியுற்றது.
தென்னமரிக்க கூட்டமைப்பில் 10 அணிகளில் டாப் 6 அணிகள் நேரடியாக தகுதிபெறும்.
மோசமான பயிற்சியாளரா?
பிரேசில் தற்போது இந்தப் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
62 வயதாகும் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் பதவிக்காலம் முடிந்ததாக கூட்டமைப்பு கூறியுள்ளதாக ரோட்ரிக்ஸ் கூறினார்.
இவருடைய பதவிக்காலத்தில் பிரேசில் அணி 7 வெற்றி, 7 டிரா, 2 தோல்விகளை சந்தித்துள்ளன.
கடைசி 4இல் ஒரு தோல்வியும் 25 கோல்கள் அடித்தும் 17 கோல்கள் விடுக்கொடுத்தும் இருக்கிறது பிரேசில் அணி.
அடுத்த பயிற்சியாளர் யார்?
கடந்தாண்டு கோபா அமெரிக்கா காலிறுதியில் பெனால்டி வாய்ப்பில் பிரேசில் வெளியேறியது.
2030 வரை ரோட்ரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருப்பார். ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் கார்லோ அன்செலட்டி, அல்-ஹிலால் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸை நியமிக்க பிரேசில் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருவருக்கும் அடுத்த மாதம் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.