மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்
தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘அ’ வகுப்பு உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ள பயனாளிகளை அடையாளம் கண்டு பேரவை பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பித்து உதவிகளை பெற வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தாயகம் திரும்பிய மக்களில் குடும்பங்களை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை அறிவித்த கூட்டமைப்பின் தலைவா்கள் இ.சந்தானம், சி.தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் கணேசன், பேரவை பிரதிநிதி கலைச்செல்வன், நிா்வாகிகள் மணிகண்டன், ராமமூா்த்தி, நாகநாதன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.