கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
இ-பாஸ் கட்டுப்பாடுகள் அமல்: நீலகிரிக்கு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமைமுதல் அமலுக்கு வந்தபோதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போலவே காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமைமுதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
கேரளத்தில் விடுமுறை என்பதாலும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை வழக்கமாகவே காணப்பட்டது.