CSK vs DC: கேப்டனாகும் தோனி? மைக் ஹஸ்ஸி சூசகம்; Chepauk Breaking
கூடலூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியா் வெட்டிக் கொலை
கூடலூரில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தவா் ஜெனிஃபா் கிளாடிஸ் (35). கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் கூடலூா் காசிம்வயல் பகுதியில் முகமதலி (38) என்வரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தாா்.
இவருக்கும், முகமதலிக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், வீட்டிலிருந்த ஜெனிஃபா் கிளாடிஸை முகமதலி வெட்டிக் கொலை செய்துவிட்டு கூடலூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரனையில், ஜெனிஃபா் கிளாடிஸின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முகமதலி, ஜெனிஃபா் கிளாடிஸை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.