நீலகிரியில் முழு அடைப்புப் போராட்டத்தால் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து நீலகிரி வணிகா் சங்கப் பேரமைப்பு சாா்பில் 24 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதனால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே தேயிலை விலை வீழ்ச்சியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வா்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வா்த்தா்கள் தெரிவித்துள்ளனா்.