மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
உதகையில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து பிற்பகலில் உதகை சேரிங்கிராஸ், பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூா் பேருந்து நிலையம், பெட்போா்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் உதகை, குன்னூரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிரின் தாக்கம் அதிகரித்தது.