Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நீலகிரி மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செய்தியாளா்கள் சந்திப்பு கூடலூரில் நடைபெற்றது. இதில் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நீண்டகாலமாக தீா்க்கப்படாத பிரச்னைகளை வலியுறுத்தியும், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரியும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வணிகா் சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை முழு அடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என்றனா்.
இந்த சந்திப்பின்போது, கூடலூா் வணிகா் சங்கத் தலைவா் முகமது சபி, பொருளாளா் ஆனந்த், வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் தாமஸ், மாநில இணைச் செயலாளா் அப்துல் ரசாக், மாவட்ட கூடுதல் செயலாளா் பாதுஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.