தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்கள் அதிக நில அதிர்வு மண்டலத்தில் வருகின்றன.
இதனால் இப்பகுதியில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.