ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
Earthquake: மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை... அச்சத்தில் மக்கள்!
மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கி முனையில் ராணுவ ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற அங்கு ஏரளமான கிளர்ச்சிப் படைகள் தோன்றி, ராணுவத்திற்கும் - கிளர்ச்சிப் படைகளுக்குமிடையே எப்போதும் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கிய வண்ணமிருந்தன. இது மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மன நடுக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது இயற்கை பேரிடராக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கிப் போட்டிக்கிறது.

இந்திய நேரப்படி நேற்று காலை 11.30 மணி அளவில் மிகக் கடுமையாக 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதை உணர்ந்து தப்பிழைத்து மக்கள் ஓடுவதற்கு அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவதாக மற்றொரு நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்தக் கடுமையான நிலநடுக்கத்தால் மியான்மரில் கார்கள் குலுங்கி, கட்டடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து நூற்றுக்கணக்கானோர் அதில் சிக்கியுள்ளனர். அருகே தாய்லாந்திலும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி 1002 பேர் பலியாகியிருப்பதாகவும், 2,376 பேர் படுங்காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மியான்மரின் தலைநகர் மாண்டலே, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வெளியாகும் காணொலிகள், புகைப்படங்கள் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இன்னும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் ஏராளமானவர்கள் கட்டட சரிவுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீட்புப் படையினர் இரவும் பகலுமாக தீவர மீட்புப் பணியில் இறங்கியிருக்கின்றன. இதற்கிடையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்காவின் புவியில் ஆராய்ச்சி நிறுவனம் (யூ.எஸ்.ஜி.எஸ்), "மியான்மர் நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதன் பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தைக் கடக்கலாம்" என்று தெரிவிப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா உணவுகள், டென்ட், முதலுதவி மருந்துகள், துணிகள் அடங்கிய 15 டன் நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியிருக்கிறது. பல்வேறு அண்டை நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.