பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
Earthquake: மியான்மர், தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவில் 'நிலநடுக்கம்' - அச்சமூட்டும் வீடியோக்கள்!
மியான்மார் நாட்டில் இன்று காலை ரிக்டர் அளவுகோளில் 7.7 மற்றும் 6.4 அளவுகளில் இரண்டு பெரும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுவதன்படி, மத்திய மியான்மரில் சகாயிங் நகருக்கு 16 மற்றும் 18 கிலோ மீட்டர் தொலைவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மையங்களும் தலைநகர் நய்பிடாவிலிருந்து 250 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நடுக்கத்தை வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்து வரை உணர்ந்ததாக கூறியிருக்கின்றனர். எக்ஸ் தளத்தில் வானுயர்ந்த கட்டடங்கள் நடுங்கும், மக்கள் அச்சத்தில் ஓடிவரும் வீடியோக்கள் பரவியுள்ளன.
#BREAKING#Earthquake#Myanmar / #Burma
— OC Scanner (@OC_Scanner) March 28, 2025
A Magnitude 7.7 quake struck about 20 minutes ago. No Tsunami threat. Strong Shaking was felt as far as Bangkok with slight damage. No immediate reports from local area yet https://t.co/c7JWtZAXOipic.twitter.com/NtcniGLYtA
வடக்கு தாய்லாந்தில் உள்ள பிரபல சுற்றுலா நகரமான சியங் மாய்யில் (Chiang Mai) வசிக்கும் டுவாங்ஜாய் என்ற நபர் AFP ஊடகத்தில், "நான் அதைக் கேட்டேன்... உறங்கிக்கொண்டிருந்த என் அறையில் இருந்து இரவு உடைகளுடனேயே வெளியேறி எங்கள் கட்டடத்தில் இருந்து முடிந்தவரை தூரமாக ஓடிவிட்டேன்" என பயத்துடன் பேட்டியளித்துள்ளார்.
பாங்காங்கில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில், ஒரு மிகப் பெரிய கட்டடம் ஆடும் சத்தம் கேட்பதோடு, அதில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து தண்ணீர் விழுவதையும் பார்க்க முடிகிறது.
Whole Bangkok shook like Crazy! #Bangkok#earthquakepic.twitter.com/99v7ySZDGc
— Srushti Gopani (@DrSrushtiG) March 28, 2025
மற்றொரு வீடியோ பாங்காங்கில் உள்ள கட்டடம் இடிந்து விழுவதைக் காட்டுகிறது.
Breaking: Video shows the moment a skyscraper under construction collapsed due to earthquake in Bangkok. pic.twitter.com/OIdxc4epKf
— PM Breaking News (@PMBreakingNews) March 28, 2025
பாங்காங் நகரில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா அவசர கூட்டம் நடத்தியுள்ளார்.
தாய்லாந்தில் ஒரு கட்டடம் இடிந்ததில் 43 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமில்லை.
இதுமட்டுமல்லாமல், தென்மேற்கு சீனாவிலும் வடகிழக்கு இந்தியாவின் சில இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.