ஓடிடியில் அகத்தியா!
ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
சரித்திர காலப் பேய்க்கதையாக உருவான இப்படத்தில் நாயகியாக ராஷி கன்னா நடித்திருந்தார். ரூ. 25 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூலித்தது.
இதையும் படிக்க: வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
