தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்
அதிரடியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸில் வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?
17 ஆண்டுகளாக சிஎஸ்கேவின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதிலும், வெற்றி பெற அதிக ரன்கள் தேவைப்பட்டபோது தோனியை களமிறக்காமல் அஸ்வினை களமிறக்கியது மிகப் பெரிய பேசுபொருளானது.
ஸ்டீஃபன் பிளெமிங் கூறியதென்ன?
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு சிஎஸ்கேவின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிரடியாக விளையாட தங்களிடமும் வீரர்கள் இருப்பதாகக் கூறி விமர்சனங்களுக்கு சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க: அணியில் இணைந்த ஹார்திக் பாண்டியா; முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?
சிஎஸ்கே விளையாடும் விதம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்டீஃபன் பிளெமிங் பதிலளித்ததாவது: முதல் போட்டியில் வெற்றி பெற்றது நன்றாக விளையாடியதற்கு அடையாளம். எங்களிடமும் அதிரடியாக விளையாடுவதற்கு வீரர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கேவின் பேட்டிங் தொடர்பான கேள்விகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் சிஎஸ்கேவை குறைத்து மதிப்பிட்டு தப்பு கணக்கு போட வேண்டாம். எங்களது வீரர்கள் நன்றாகவே விளையாடி வருகிறார்கள் என்றார்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், நாளை (மார்ச் 30) குவாஹாட்டியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவுள்ளது.