விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்
அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் நிதித்துறையில் சிறப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சுஜாதா தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுஜாதாவின் கணவர் வி.கே. பாண்டியனும் அக்டோபர் 2023 இல் விருப்ப ஓய்வு பெற்று நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வியை தழுவியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து
இத்தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். ஆனால், ‘பாண்டியனை விமா்சிப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் அவரது பணி பாராட்டுக்குரியது’ என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.