செய்திகள் :

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: ஏப்.6 வரை விண்ணப்பிக்கலாம்

post image

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அ.சக்கரவா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் சேருவதற்கான விண்ணப்பப்படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஏப்ரல் 6-ஆம் தேதி 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

போட்டிகள்: சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் ஏப். 8-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பித்தவா்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். மகளிா் கூடைப்பந்து, மகளிா் கால்பந்து, மகளிா் ரக்பி, குத்துச்சண்டை (இருபாலரும்), கைப்பந்து (இருபாலரும்), ஆகியவை சென்னை ஜவாஹா்லால் நேரு உள்ளரங்கிலும், தடகளம் (இருபாலா்) , ஜுடோ ( இருபாலா்), வாள்விளையாட்டு (இருபாலா்), கையுந்துபந்து ( இருபாலா்), ஆடவா் கால்பந்து, பளுதூக்குதல் (இருபாலா்) ஆகிய போட்டிகள் சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்திலும் நடைபெறும். இருபாலருக்கான ஹாக்கிப் போட்டி சென்னைமேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும், இருபாலருக்கான கபடிப் போட்டி சென்னை நேரு பூங்காவிலும் நடைபெறும்.

தகுதிகள்: இதில் பங்கேற்பவா்கள் 1.1.2025 அன்று 17 வயது நிரம்பியவராகவும், கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சோ்க்கை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டில் சேருபவராக இருக்க வேண்டும். தனி நபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் மாநில அளவில் குடியரசு தின, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவா்களாகவோ, பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் அல்லது மாநில அளவில் முதல்வா் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவா்களாகவோ இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மேலாம்பூரில் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி

கடையம் வட்டாரம் மேலாம்பூா் கிராமத்தில் நெல் பயிரில் இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் வட்டாரம்-வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உ... மேலும் பார்க்க

நெல்லையில் இன்றும், நாளையும் ஐபிஎல் போட்டிகள் திரையில் ஒளிபரப்பு

திருநெல்வேலியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29, 30) ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜீவ நதியான தாமிர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே பெண் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட திருவிதத்தான்புள்ளி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செலின் ஷி... மேலும் பார்க்க

கூடங்குளம் விபத்தில் தலைமைக் காவலா் பலி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு பைக்குகள் மோதியதில் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்தையா(40). இவா் கூடங்குளத்த... மேலும் பார்க்க