ஹரியாணா: தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்
பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை!
உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை நம்பியோ வெளியிட்டுள்ளது.
உலகளவில் குற்றங்களின் நிலை, பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் முதலானவற்றை மதிப்பிட்டு, பாதுகாப்பான நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியலை நம்பியோ ஆய்வறிக்கை வெளிட்டுள்ளது.
நம்பியோ 2025 ஆய்வின்படி, அன்டோரா நாடுதான் உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண் 84.7 என்ற அளவில் குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் 84.5 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், 84.2 மதிப்பெண்களுடன் கத்தார் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
மேலும், 55.7 மதிப்பெண்களுடன் 66 ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்கா 50.8 மதிப்பெண் பெற்று, 89 ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க:குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!