செய்திகள் :

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் துவக்கம்!

post image

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இரண்டு படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் வணிக ரீதியாகவும் பெரிய இடத்திற்குச் சென்றுள்ளார்.

அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இதையும் படிக்க: மகனாக இருந்தாலும் துருவ் எனக்குப் போட்டிதான்: விக்ரம்

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

காதல் திரைப்படமாக உருவாகும் இது தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜென்டீனாவுடனான தோல்வி எதிரொலி: பிரேசில் பயிற்சியாளர் நீக்கம்!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தோல்வியினால் பிரேசில் பயிற்சியாளர் நீக்கப்பட்டுள்ளார். பிரேசில் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியரின் 14 மாத மோசமான செயல்பாடுகளால் பிரேசில் கால்பந்து கூட்டமைப்... மேலும் பார்க்க

ஓடிடியில் அகத்தியா!

ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த அகத்தியா திரைப்படம் திரையரங்குகளில... மேலும் பார்க்க

திருக்கணிதப்படி: கும்ப ராசியிலிருந்து மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார் சனிபகவான்!

ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என இரு முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கப்படும் நிலையில், இன்று (மார்ச் 29) திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. அதன்படி, சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்ச... மேலும் பார்க்க

வீர தீர சூரன் வசூல் எவ்வளவு?

வீர தீர சூரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் வியாழக்கிழமை மாலைக் காட்சியாகத் தாமதமாக வெளியானது. படத்தின் தயாரிப்பு நி... மேலும் பார்க்க

100-ஆவது நாளில் மார்கோ! சிறப்பு போஸ்டர்!

உன்னி முகுந்தன் நடித்த மார்கோ 100-ஆவது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது.அதிக வன்முறைக் காட்சி... மேலும் பார்க்க

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் மணிகண்டன்!

நடிகர் மணிகண்டன் மீண்டும் இயக்குநராக படம் ஒன்றை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் முன்னணி நடிகராக மாறியுள்ளா... மேலும் பார்க்க