100-ஆவது நாளில் மார்கோ! சிறப்பு போஸ்டர்!
உன்னி முகுந்தன் நடித்த மார்கோ 100-ஆவது நாள் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த டிச. 20 தேதி வெளியானது.
அதிக வன்முறைக் காட்சிகள் கொண்ட ஆக்சன் படமான இது கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.
இந்தப் படம் தற்போது 100ஆவது நாளை கடந்துள்ளது. அதற்காக சிறப்புப் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது உன்னி முகுந்தனின் 2ஆவது ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிப்.13ஆம் தேதி வெளியாகியது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உன்னி முகுந்தன் கூறியதாவது:
வரலாற்றில் இடம்பிடித்த மார்கோ
100 நாள்களில் திரையரங்குகளில் ஓடி ரூ.100க்கும் அதிகமான கோடியை வசூலித்துள்ளது.
திரையில்: த்ரிசூர் தேவி திரையரங்கில் பார்க்கலாம்
ஓடிடியில்: சோனி லைவ், அமேசான் பிரைம் (ஹிந்தி), ஆஹா (தெலுங்கு)
Stepping into history!
— Unni Mukundan (@Iamunnimukundan) March 29, 2025
M️RCO celebrates 100 glorious days in theaters with a ₹100 CR+ gross collection!
Watch M️RCO:
▶️ On the big screen at Davis Theatre, Varandarapilly, Thrissur!
▶️ On OTT: Sony LIV, Amazon Prime (Hindi), and AHA (Telugu)!#Marcopic.twitter.com/oETm1kWtie