திருக்கணிதப்படி: கும்ப ராசியிலிருந்து மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார் சனிபகவான்!
ஜோதிடத்தில் திருக்கணிதம், வாக்கியம் என இரு முறைகளில் பஞ்சாங்கம் கணிக்கப்படும் நிலையில், இன்று (மார்ச் 29) திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
அதன்படி, சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்கு உள்ளார்.
இன்று பெயர்ச்சியாகும் சனியால் மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் நன்மை பெறும் ராசிகளாகும்.
ரிஷபம், விருச்சிகம் ஆகிய ராசிகள் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகளாகும்.
மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகளாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அடுத்தாண்டு 2026 மார்ச் 6 ஆம் தேதிதான் சனிப் பெயர்ச்சி நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனிபகவானுக்கு உரியப் பரிகாரத் தலமாகத் திகழும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், பிராணேஸ்வரி திருக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது.