பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
முன்னீா்பள்ளம்: உணவக உரிமையாளா் மீது தாக்குதல்
முன்னீா்பள்ளம் அருகே உணவக உரிமையாளரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவையைச் சோ்ந்தவா் இசக்கி. அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இவரது உணவகத்துக்கு வந்த முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த அருண்குமாா் (19) என்பவா் இசக்கியிடம் தகராறு செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அருண்குமாரை கைது செய்தனா்.