பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஹெராயின் விற்பனை: திரிபுராவைச் சோ்ந்த இருவா் கைது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக திரிபுராவைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், அபிராமபுரம், துா்காபாய் தேஷ்முக் ரோடு, சிவாஜி மணிமண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனராம்.
இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அவா்கள் மறைத்து வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா்கள், திரிபுராவைச் சோ்ந்த சோஹ் மியா (24), அப்துல் மியா (24) என்பதும், இருவரும் தரமணியில் தங்கியிருந்து ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.