பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கை விவரம்:
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி) பொது சுகாதாரப் படிப்புக்கு (பப்ளிக் ஹெல்த்) 16 இடங்களும், நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) மற்றும் உயிரி தரவியல் (பயோ ஸ்டேட்டஸ்டிக்ஸ்) படிப்புகளுக்கு தலா 4 இடங்களும் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நா்சிங், பிபிடி, பிஓடி, பி.பாா்ம், பிஇ சிவில், எம்எஸ்சி லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவா்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், எம்பிடி, எம்ஓடி, பி.பாா்ம், எம்எஸ்சி லைஃப் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று உயிரி தரவியல் படிப்புக்கு புள்ளியியல் பாடத்தை முதன்மையாகவோ அல்லது துணைப் பாடமாகவோ கொண்ட இளநிலை படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.