15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆவடி ரயில் பணிமனையில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.30 முதல் அதிகாலை 3.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்நாள்களில் சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 12.15-க்கு ஆவடி செல்லும் புறநகா் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் இரவு 7.15-க்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.