15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
Manoj Bharathiraja: "இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும்" - பாரதிராஜாவுக்கு அண்ணாமலை ஆறுதல்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
48 வயதான அவர் சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று (25 மார்ச்) மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
"ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என தனது சமூக வலைத்தளங்களில் இரங்கலைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் இமயம் ஐயா திரு. பாரதிராஜா அவர்களின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான திரு. மனோஜ் பாரதி அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) March 25, 2025
ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்… pic.twitter.com/tsWYz7qHKS
மனோஜ் பாரதிராஜாவின் உடல் புதன்கிழமை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு உடல் பெசன்ட் நகர் மின் மயானதிற்குக் கொண்டுச் செல்லப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...